முன்னுரை
ஜீவனுள்ள தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக!
இவ்வுலகில் தேவ வார்த்தைக்கு நிகர் ஒன்றும் இல்லை என்றாலும், நம் வாழ்க்கைக்கு தேவையான, இனிய சில ஆவிக்குரிய கருத்துக்களும் அவசியமான ஒன்றுதானே!
ஆகவே கர்த்தர் சித்தப்படியே இக்கருத்துக்களை எழுத முன் வந்துள்ளோம். இவை ஆவிக்குரிய ஜீவியத்திற்கும், பொது வாழ்க்கைக்கும் பிரயோஜனமாயிருக்கும். இவற்றை எழுத, ஊக்குவித்தது எங்கள் சபை போதகர் S. ஆபிரகாம் அவர்களே!
இக்கருத்துக்கள் சொந்த கருத்துக்கள் மட்டுமல்லாது, பல கிறிஸ்தவ பத்திரிகைகளிலிருந்தும் எடுத்து எழுதப்பட்டவைகளே! பலரும் படித்து பயனடையுங்கள்.
கர்த்தர் ஒருவருக்கே கனமும், மகிமையும், துதியும் உண்டாவதாக. ஆமென்!