❗ ஆயத்தப்படு - ஆயத்தப்படுத்து❗
❗நீ செய்யும் செயல்கள் எல்லாம் என் பார்வையில் படும் என்பதை எண்ணி உணர்வோடிரு -ஆகவே எனக்கு பயந்திரு.
❗நீ பேசும் வார்த்தைகள் என்னிடத்தில் பதியப்படுகிறது என்பதை அறிந்திடு -ஆகவே எதிலும் கவனமாய் இரு.
❗நீ காணும் காட்சி அனைத்தும் பரலோகத்தில் அத்தாட்சிகளாகிறது என்பதை புரிந்திடு - ஆகவே பாவத்திற்கு விலகி ஓடு.
❗என் வருகையை குறித்த எதிர்பார்ப்பு உனக்கு அதிகம் இருக்கிறது என்பதை அறிவேன். ஆகவே நீ உலகில் எப்படி வாழ்கிறாயோ அதுதான் நித்தியத்தை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்து வாழ்ந்திடு.
❗ பரிசுத்தத்தோடு வாழ்ந்து ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்து! நீயும் ஆயத்தப்படு! (எசேக்கியேல் 38:7)