பின்மாற்றம்


சத்தமிட்டு அந்நியபாஷை பேசினாலும், சத்தியத்தின் உறுதி இல்லாதவர்கள் பின்மாற்றக்காரர்களே!


1. தேவனை விட்டு விலகுவது: உணர்வில்லாத இருதயமும், கர்த்தரோடு இசைந்திராத ஆவியும் விலகச் செய்யும்.


2. இருதயம் எகிப்துக்கு திரும்புவது: கால்கள் கானானை நோக்கி சென்றாலும், இருதயம் எகிப்துக்கு திரும்புவதும் பின்மாற்றமே.


3. சபையிலிருந்து பிரிந்து செல்வது: ஆண்டவர் கொடுத்த ஆதிசபையைவிட்டு (யூதா 1:6) பிரிந்து செல்வதும் *பின்மாற்றமே!*


4. பழைய பாவத்தை மீண்டும் செய்வது:

இது அருவருப்பான செயல். பின்னிலமை முன்னிலையிலும் கேடுள்ளது.


5. பிரதிஷ்டையை உடைப்பது: பிரதிஷ்டையில் தான் தேவபெலன் வெளிப்படும். உடையும் போது வல்லமை, கிருபையை இழக்க நேரிடும்.


6.ஆதி அன்பை விட்டு விடுவது:

தனி ஜெபம், ஜெப ஆவி, அபிஷேகம் எல்லாவற்றையும் இழப்பது தான்.


7. உபதேசத்தை மறுதலிப்பது: அஸ்திபார உபதேசம், பூரணப்படுகிற

உபதேசம், உண்மையான ஜீவியம்

இவற்றில் தவறக்கூடாது.


நாமும் கூட இவற்றை எல்லாம் எண்ணி ஜாக்கிரதையாயிருக்கலாமே!