🆔 பெண்களே! எது நம் அடையாளம்?  🆔


👩🏻 அன்புக்கு மட்டுமே அடிபணிந்து, யானைக் கொத்த மனவலிமை உடையவளே பெண்.


👩🏻 மண் துவங்கி, விண்வரை சாதிக்கப் பிறந்தவள் பெண்.


👩🏻 பெண்ணே! மரத்தின் வேர் போல் நீ!


👩🏻 காலையில் மலர்ந்து, மாலையில் உதிரும் பூ அல்ல நீ!


👩🏻 ஆக்சிஜனை வெளிவிடும் இலையுமல்ல நீ!


👩🏻 கிளைகளைத் தாங்கும் அடிமரமும் அல்ல நீ!


 👩🏻 படரும் கொடி அல்ல - விருட்சம் நீ!


👩🏻 எவ்வளவு பெரிய மரத்தையும் தாங்கி நிற்கும் வேர் போல, எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தாங்கும் இதயம் கொண்டவள் நீ.


👩🏻 புற அழகு பெண்ணுக்கு அடையாளம் அல்ல.

ஆண்டுகள் பல கடந்தாலும் பெயர் நிலைக்கச் செய்யும் ஆண்டவருக்காக செய்த சாதனைகள் தான் நமக்கு அடையாளம்.


👩🏻 அக அழகு மட்டுமே நமக்கு அழியாத அடையாளம்.


நீதிமொழிகள் 31: 28 to 30