வாழ்க்கை
எறும்பு, பட்டாம்பூச்சியைப் போல வாழ ஆசைப்பட்டதில்லை.
நாய், சிங்கத்தை பார்த்து ஒரு நாளும் பொறாமைப்பட்டதில்லை.
யானை, பறக்கும் பறவையைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டதில்லை.ஆனால் மனிதனே! நீ மட்டும் ஏன்
பிறரின் வாழ்க்கையைப் பார்க்கிறாய்? பொறாமைப்படுகிறாய்? பெருமூச்சுவிடுகிறாய்?
வாழ்க்கை விசேஷமானதுதான்:
ஆனாலும் நீ பிறரின் தூக்கத்தை தூங்க முடியாது. பிறரின் பசிக்கு சாப்பிட முடியாது. பிறரின் வாழ்க்கையை வாழ முடியாது.
நீ, தனி தான்; உன் தேவை தனி தான்; உன் பிரச்சனை தனி தான்; உன் தீர்வும் தனி தான். உன் வாழ்க்கையும் கூட தனி தான். ஆயினும் உன் வாழ்க்கை அதிசயமானதுதான்; அர்த்தமுள்ளதும்தான்.
ஆகவே இன்றிலிருந்து, உன் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து பார். வாழ்வின் ரசனை தெரியும்; அர்த்தமும் புரியும்.
இந்த வாழ்க்கை கர்த்தர் உனக்குக் கொடுத்த நன்கொடை;
அதனால், அவருக்கு ஏற்றார்போல், அவர் எதிர்பார்க்கிறமாதிரி வாழ்ந்தால், சந்தோஷமும், சமாதானமும் நம் மனதில் குடிக்கொள்ளும்.
எபி 12:1 ன்படி பாரமான யாவற்றையும்...... ஓடக்கடவோம்.