💭 தேவ திட்டம் 💭
🙅♂முடியாது என்று கிதியோனைப் போல் ஒதுங்கினாலும்
🫣 ஊழியம் செய்தது போதும் என்று எலியாவை போல் பதுங்கினாலும்
🙊 ஒன்றும் தெரியாது என்று மோசே போல் தட்டி கழித்தாலும்
😨 பேதுரு போல பயந்து மறுதலித்து எதிர்காலம் எண்ணி மீன்பிடிக்க பறந்தாலும்
🫷 யோசேப்பை போல சகோதரரால் வெறுக்கப்பட்டு குழியில் தள்ளப்பட்டாலும்
🙇🏼♀️ எஸ்தரை போல பெற்றோரை இழந்து அனாதையானாலும்
😶 எரேமியாவை போல பேச அறியாத சிறு பிள்ளையாய் இருந்தாலும்
💡 இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் தேவ திட்டம் நிறைவேறியதைப் போல, நம்மை கொண்டும் அவர் திட்டப்படி பெரிய காரியங்களை செய்து நம்மை உயர்த்துவார்!