🍁 சிந்தனைக்கு🍁
🍁 தேவ பிள்ளைகள் தேவைகளுக்காக தேவனைத் தேடாமல், தேவனை தேடுவது 'தேவையானது' என தேடுங்கள்.
🍁 நமக்காக எழுதப்பட்ட வேதம், நம் கையில் மட்டுமல்ல, நம் வாழ்க்கையிலும் இருக்கிறதா என தேவன் தேடுகிறார்.
🍁 பார்ப்பவன் என்ன நினைப்பான் என்ற பயத்துடன் வாழாதீர்கள்; படைத்தவர் என்ன நினைப்பார் என்று பயந்து வாழுங்கள்.
🍁 திரும்ப திரும்ப சோதனை தாக்கினால், திரும்ப திரும்ப தேவ கிருபை தாங்கும்.
🍁 பிரச்சினையின் போது பேசாமல் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல; வார்த்தையை விட்டால் உறவு பிரியும் என்பதை உணர்ந்தவர்கள்.
🍁 வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான்.
...இடைவிடாமல் உன் தேவனை நம்பிக் கொண்டிரு. ஓசியா 12:6
...Wait for your God Always. Hosea 12:6