💎💎 கர்த்தரே விடுதலை 💎💎
💎 இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கானானை கொடுத்ததால் எகிப்தை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிவந்த சமுத்திரத்தின் வழியே போக வேண்டியதாயிற்று. 40 ஆண்டுகள் வனாந்தரத்திலே நடக்க வேண்டியதாயிற்று.
மாத்திரமல்ல;
💎 மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் வழியாக வழி நடத்தப்பட்டனர்.
அதுபோல,
💎 கர்த்தரை நாம் சுதந்தரிக்க வேண்டுமென்றால் முதலில் பாவகாரியங்களை விட்டுவிட்டு, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படுவது அவசியம்.
மாத்திரமல்ல;
💎 மேகஸ்தம்பமாகிய வேதவசனம் மூலமும், அக்கினிஸ்தம்பமாகிய ஆவியானவரின் மூலமும் நாம் வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். அப்போது தான் கர்த்தரை விடுதலையோடு ஆராதிக்க முடியும்.