🎯 கணக்கு ஒப்புவித்தல்: 🎯
🎯நாம் ஒவ்வொருவரும் நம்மை குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
🎯 தாலந்துகளுக்கு:
தாலந்து என்பது படிப்பு, திறமை, ஞானம், உருவாக்கும் திறன் இவைகளே. தாலந்து கர்த்தர் நமக்கு தந்த ஈவு அதை ஞானத்தோடு செயல்படுத்த வேண்டும்.
🎯 பணத்திற்கு:
தசமபாகத்தில் உண்மையுடனும், ஏழைகளுக்கு கொடுப்பதில் சிறந்தும், செலவு செய்வதில் சிக்கனமாகவும் இருக்க வேண்டும்.
🎯 பேசும் வார்த்தைகளுக்கு:
சொற்களின் மிகுதியால் பாவம் இல்லாமற் போகாது. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
🎯 சிந்தனைகளுக்கு:
அவர் கண்களுக்கு முன்பாக சகலமும் நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் உள்ளது. ஆவியானவரிடம் சிந்தையை ஒப்புக்கொடுக்கும் போது பொறுப்பேற்றுக் கொள்வார்!