மூன்றை எடு, மூன்றை விடு



பின்பற்ற வேண்டியவை: தூய்மை, நீதி, நேர்மை.


மறக்கக்கூடாதவை:

உண்மை, கடமை, பிறர் செய்த உதவி.


கொடுக்க வேண்டியவை: தக்க சமயத்தில் உதவி, ஆறுதலான பேச்சு, உண்மையான பாராட்டு.


தவிர்க்க வேண்டியவை: துரோகம், நன்றி மறத்தல், பழிக்குப் பழி.


கடினமானவை: இரகசியத்தை பாதுகாத்தல், தனக்கு இழைத்த அநியாயத்தை மறத்தல், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குதல்.


அடக்க வேண்டியவை: நாக்கு, நடத்தை, கோபம்.


💁🏻‍♂️ தீர வழி இருக்கு:

✨ கடவுளிடம் நெருங்கினால் கவலை தீரும்.

✨ புத்திசாலித்தனம் இருந்தால் குழப்பம் தீரும்.

✨ துணிச்சல் இருந்தால் பயம் தீரும்.


💁🏻‍♀️ மறக்காதீர்:

கடந்த கால அனுபவத்தை மறக்க கூடாது.

நிகழ்காலத்தை பயன்படுத்த தவறக்கூடாது.

எதிர்காலம் பற்றி வீணாக கவலைப்படக் கூடாது.