உறவு


1. உலகில் "உறவு" என்பது மிகமிக முக்கியமான ஒன்று.


2. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழி முற்றிலும் மெய்தானே!


3. காலங்கள் கடந்தும் காலாவதி ஆகி விடாத மருந்து அன்பானவர்களின் அழகான நினைவுகள் மட்டுமே!


4. எப்போதும் உங்களை அனுசரித்துச் செல்லும் உறவுகளை காயப்படுத்தாதீர்கள். அவர்களின் உறவு விலைமதிப்பற்றது. இழந்து விட்டால் பெறுவது கடினம்.


5. உறவுகளைப் பிரிப்பது தூரங்கள் அல்ல- மௌனங்கள்.

6. பணம் இன்று வரும் - நாளை வந்த வழி சென்று விடும். ஆனால், பாசம் என்றும் நிலையானது- பணத்துக்காய் பாசத்தை விற்று விடாதீர்கள். மீண்டும் கிடைப்பது கடினம்.


7. உறவு என்பது ஒரு புத்தகம், தவறு என்பது ஒரு பக்கம்.

ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்துவிடாதீர்கள்.


8. அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள், வருவதற்கு வழி இருக்கும்; வசதி இருக்கும்-ஆனால் வாழ்க்கை இருக்காது. இருப்பினும்


உலகில் எல்லா உறவுகளையும் இழந்தாலும், நமக்கென்று கடைசி வரை கைவிடாத உறவு நம் பரம தகப்பன் இயேசு மட்டுமே!


9. நிலையற்ற உலகில், நிலையான இயேசுவின் நிரந்தர அன்பைவிட்டு பிரியாதபடி எச்சரிக்கையாயிரு!!