குருவியின் செய்தி
தேவபிள்ளைகளே!
1. நீங்கள் பரிசுத்தமாய் இருந்தால் தான் பலிபீடத்தண்டை செல்ல முடியும். ஆனால் பலிபீடத்தண்டையில் அல்லவா எங்கள் வீட்டைக்கட்ட ஆண்டவர் அனுமதித்துள்ளார் (சங்கீதம் 84:3).
2. சங்கீதம் 124:7ல் கூறியபடி வேடனுடைய கண்ணிக்குத்தப்பின குருவியைப் போல, பிசாசு வைக்கும் கண்ணியில் சிக்கி தவிக்கிறவர்களாய் அல்ல, தப்புகிறவர்களாய் இருங்கள்.
3. (நீதிமொழிகள் 27:8) கூட்டுக்குள் இருக்கும் வரைதான் எங்களுக்கு பாதுகாப்பு. அதுபோல தேவன் தந்த குடும்பம், பணியிடம், ஊழியம் என எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு பாதுகாப்பு.
4. (பிரசங்கி 12:4)ன்படி அதிகாலையில் "கீச்-கீச்" என்ற சத்தத்திற்கு வயதானவர்கள் மட்டுமா? வாலிபர்களையும் எழுப்பினாலும் அவர்களோ..... "வாலிபனே வாய்ப்பை இழந்து விடாதே".
5. லூக்கா 12:6- மலிவு விலையில் விற்கப்படுகின்ற எங்களையே மறக்காத தேவன், உங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்தார். உங்களை மறந்து விடுவாரா என்ன? ஆகவே "கவலையோ, பயமோ" வேண்டாம்.