கழுதையின் வருத்தமும் சிலுவையின் திருத்தமும்

இயேசுவை சுமந்த என்னைவிட இயேசுவை கொன்ற உன்னை புனிதமாக்கி விட்டார்களே என்று, சிலுவையை பார்த்து புலம்பியதாம் கழுதை.


அந்தோ! சிலுவையின் பதில்:


இயேசுவுக்கு கிடைத்த வஸ்திர விரிப்பு,முதன்மையான இடம், மதிப்பு, மரியாதை எல்லாம் உனக்கும் கிடைத்ததே!


ஆனால்,


என்னை சுமந்தவரை நானும் சுமந்தேன்; அவர் விழும்போது நானும் விழுந்தேன்; அவர் மீது அடித்த அடி என் மீதும் விழுந்தது;

ஆணி அவரை மட்டும் அல்ல, என்னையும் துளைத்தது; ஒதுக்கப்பட்டவனை போல ஓரத்தில் கிடந்தேன்;


அதனால் தான், வெறுக்கப்பட்ட நான் விரும்பப்படலானேன், புறக்கணிக்கபட்ட நான் புனிதமானேன் என்றது.


உடனே கழுதை மன்னிப்பு கேட்டு, பாடல்களை நான் சுகித்தேன் பாடுகளையோ நீ சகித்தாய் என்றது. ஆரவாரங்களை நான் சுகித்தேன்,பாரங்களையோ நீ சகித்தாய் என்றது.


அதற்கு சிலுவை...

இருவருமே இயேசுவை சுமந்ததால், இருவருமே பாக்கியம் பெற்றவர்கள் தான் என்றது. இவற்றையெல்லாம் அறிந்த, தெரிந்த நாமும் இயேசுவை சுமக்க ஆயத்தமாவோமா!


தன் சிலுவையை.... மத்தேயு 10:38




அடுத்த தேன்துளி