எழும்பு-ஒளிவீசு
1. முதலில் நாம் நம்மை நம்பவேண்டும். இதுவே தன்னம்பிக்கை.
2. ஊனம் உடலில் இல்லை இதயத்திலும் சிந்தனையிலும் தான் இருக்கிறது.
3. எக்காரணம் கொண்டும் பிறரோடு ஒப்பிடக்கூடாது ஒப்பிட்டால் குழம்பிப்போவோம்.
4. பிரச்சனைகளை, சவால்களைப் பார்க்க பழகிக்கொள்.
5. உன்னிடம் உள்ளதைப் பார். இல்லாததைப் பற்றி பேசாதே!
6. பொறுப்புணர்வு கொள். சாக்குச் சொல்லாதே!
7. பயிற்சி, முயற்சியைக் கைவிடாதே.
விழுந்து கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் எழுந்து நடந்தால் எரிமலையும் வழி கொடுக்கும்.
முடியாது என்று சொல்லிவிட்டால் மூச்சுக் காற்றும் நின்று விடும் முடியும் என்று துணிந்துவிட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்.
தன்னம்பிக்கை இருப்பின் எண்ணியது எண்ணியபடி நடக்கும் இடையூறுகள் எரிந்து சாம்பலாகும்.
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே_ _ _ _ _ பிலிப்பியர் 4:13