இவைகளையும் செயல்படுத்தலாமே!
எது நடந்தாலும்; என்ன நடந்தாலும்;
எப்படி நடந்தாலும்; எங்கே நடந்தாலும்; எப்போது நடந்தாலும்; எவ்வாறு நடந்தாலும்; எல்லாவற்றுக்காகவும் துதிப்பது என்றும், எப்போதும் நல்லது.
கர்த்தரின் வேலை, கர்த்தரின் வேளையில்தான் நடக்கும்; எனவே நம் வேலை கர்த்தரின் வேளைக்காக அமைதியாக, காத்திருப்பது மட்டுமே; அவர் "எப்படிச் செய்வார்" என்ற சந்தேகம் தேவையில்லை; அவர் "எப்படியும் செய்வார்" என்ற விசுவாசம் ஒன்றே போதுமானது.
😶 உனக்கு ஒன்று பிடிக்காத போது, உன்னை யாருமே புரியாத போது, உன்னை விட்டு பிறர் விலகும் போது, உன்னோடு யாருமே பேசாத போது, உன்னை பிறர் குறை கூறும் போது, உனக்கு கோபம் வரும் போது,
உனக்கு பிரச்சினை வரும் போது,
"மௌனம்" ஒன்றே சிறந்தது.
😇 கடவுளின் மௌனம் கண் கலங்க வைக்கலாம். காத்திருந்து பார்-அவர் மௌனம் கலைத்து பேசும் போது மரணம் கூட கண்ணை மூடிக்கொண்டு கதவை திறக்கும்.
எதுவும் பேசாமல் 4 நாள் இருந்து விட்டு இப்போது பேசுகிறார்
லாசருவே வெளியே வா....
இயேசுவோ பேசாமலிருந்தார்... மத்தேயு 26:63