🎄கடவுள் மனிதனாக பிறந்தது ஏன்?🎄
🎄 கடவுளை வெளிப்படுத்த: கடவுளின் அன்பை, இரக்கத்தை, வல்லமையை வெளிப்படுத்த இயேசு பிறந்தார். மனிதனோடு தன்னை ஈடுபடுத்தி எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கிறவராக தம்மை வெளிப்படுத்தினார்.
🎄 மனிதனை விடுவிக்க: இயேசு என்ற பெயரின் அர்த்தம் இரட்சகர். நம்மை விடுவிக்க பிறந்தவர். எதிலிருந்து? பாவம், சாபம், வியாதி, பயம் - இவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுவிக்கிறார்.
🎄 பிசாசின் கிரியைகளை அழிக்க: பிசாசின் கிரியைகளை அழிக்கவும், நமக்கு ஜீவன் கொடுக்கவும், நாம் பரிபூரணப்படவும் வந்து, சிலுவையிலே வெற்றி சிறந்தார்.
😇 அது மட்டுமல்ல; இன்றும் நம் இதய கதவை தட்டுகிறார். இயேசுவுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கும் போது விடுதலை, சமாதானம் அளிப்பார்!