♦️♦️ சிந்தனைக்கு♦️♦️

♦️ஊழியத்திலே கடினமானவைகள் என அநேகம் உண்டு; ஆனால், முடியாதது என ஒன்றுமில்லை.


♦️ பிள்ளைகளை வாழ்த்திக் கொண்டே இருங்கள்; வளர்ந்து விடுவார்கள். அவமானப்படுத்தியே அடக்கி விடாதீர்கள்.


♦️ எழுதும் எழுது கோலுக்கு தெரியாது என்ன எழுதனும் என்று; எழுதுபவருக்கு தான் தெரியும். அது போல, உன் பாதைகள் உனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், உன்னைப் பயன்படுத்தும் இயேசு உன்னை சரியான பாதையில் நடத்துவார்.


♦️ ஜெபிக்க எழுவது என்பது நம் வாழ்வில் ஜெயிப்பதற்கு துவக்கம்.


♦️ இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையை சரியாகவே காட்டுகிறது.


♦️ பயன்படுத்தப்படும் நேரத்தில் பெருமைப்படாமலும், புறக்கணிக்கப்படும் நேரத்தில் புண்படாமலும் இருப்பவனே தேவன் தேடும் மனிதன். 


♦️ வெறுப்பதை விட ஒதுங்கிப் போவது நல்லது. ஒதுங்கிப்போவதை விட மறந்துவிடுவது மிகவும் நல்லது.


😇 நம்முடைய போராயுதங்கள் வசனமும், ஜெபமும் தான்.