சேவலின் சிறப்பு
1. தாம் முன்னறிவித்ததை பேதுருவுக்கு நினைவு படுத்த இயேசு தெரிந்தெடுத்தது சேவல்.
2. பேதுரு மனங்கசந்து உணர்த்தப்பட காரணமாயிருந்தது சேவல்.
3. பேதுருவின் தவறை நினைவுபடுத்த திட்டமிடப்பட்டது சேவல்.
4. தனக்கு கொடுத்த பொறுப்பை மறக்காமல் நிறைவேற்றியது சேவல்.
5. தனக்கு குறித்த பணியை ஏற்ற நேரத்தில் செய்து முடித்தது சேவல் (2 முறை கூவியது).
அதுமட்டுமல்ல
6. அதிகாலை கூவி, உலகத்தையே உற்சாகமாய் துதிக்கச் செய்வதும் சேவல்தானே!
வல்ல தேவனுக்கு வலியவைகளை வைத்துத்தான் விந்தையானவைகளை நிகழ்த்த வேண்டும் என்பதல்ல அற்பமானதையும் பயன்படுத்தி அறிவுக்கெட்டாத சாதனைகளையும் படைக்கிறவர் அவர் ஒருவர் மட்டுமே!!