💎💎 சிந்தனைக்கு 💎💎
💎 இரவு பகலாய் ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த பின் தான் பலருக்கு தெரிகிறது தவறவிட்ட ஆரோக்கியம் தான் உண்மையான செல்வம் என்று.
💎 சிக்கலிலும், சிக்னலிலும் பொறுமையாக காத்திருக்கும் பொழுது வழி தானாக கிடைக்கும்.
💎 வாக்குவாதத்தில் ஒருவர் தான் வெல்லலாம்; சமாதானத்தினாலோ இருவரும் வெல்லலாம்.
💎 சந்தோஷத்தில் வாழ்கிறோம் என்பதை விட எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு வாழ்கிறோம் என்பதே உண்மை.
💎 வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழ்ந்து விடாதீர்கள். நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.
💎 செய்ய வேண்டிய பணி பெரிய பணி; செல்ல வேண்டிய தூரம் வெகு தூரம்; சந்திக்க வேண்டிய ஆத்துமாக்கள் கோடி கோடி.
💎 சுயத்தையே பார்க்கிறவன், சுவருக்குள் அடங்குகிறான். சுற்றிலும் பார்க்கிறவன் சுவிசேஷத்திற்காய் ஓடுகிறான்.