முடிந்து போன ஆண்டிலே


கொரோனா என்ற கொடிய நோய் பல உயிர்களை கொள்ளையடித்து இருந்தாலும், வெள்ளப்பெருக்கினால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும், பல சங்கடங்களை சகித்திருந்தாலும், விழுந்து போனதை எண்ணி வேதனைப்பட்டு கொண்டிராமல், கடந்ததை எண்ணி கலங்காமல், எதிர்காலத்தில், எதிர்நீச்சல் போட்டு இயேசுவை இறுகப் பற்றிப் பிடிப்போம்.


மேலும் புதிதாய்ப் பிறக்கும் புத்தாண்டிலே...


1. புதிய முயற்சியை மேற்கொண்டு அரிய சாதனைகளை சாதிப்போம்.


2. குறைகளைக் களைந்து நிறைகளை மேம்படுத்துவோம்.


3. மாற்றங்களை மனதில் கொண்டு இன்றைய சவால்களை எதிர்கொள்வோம்.


4. ஆத்தும இரட்சிப்பைப் பெற்று அச்சமின்றி அன்பரை பின் தொடர்வோம்.


5. தேவையற்றவைகளை விட்டொழித்து விட்டு மனமிரங்கும் மகத்துவரின் பாதம் சரணடைவோம்.


புத்தாண்டில் புதுமை படைத்து மனம் மாறி கர்த்தரையே சேவிப்போம்.


வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்.சங்கீதம் 65:11