விடுகதை
1.தியத்தீரா ஊரைச் சேர்ந்தவள், இரத்தாம்பரம் விற்கிறவள், ஊழியரை உபசரிக்கிறவள்.அவள் யார்? லீதியாள்.
2. கணவனே கண்கண்ட தெய்வம் என்றவள், எதிலும் எதிர்க் கேள்வி கேட்காமல் கணவனுக்கு ok, சொல்பவள். காத்திருந்தாள் கர்த்தரின் கட்டளைக்கு. யார்? சாராள்
3. 4 எழுத்து பெயர் உடையவள்;
3 நாள் புசிக்கவில்லை;
2 முறை விருந்து செய்தாள்;
1 குலத்தை ரட்சித்தவள்
yes+ 2 எழுத்து = யார்? எஸ்தர்
4. மகிழ்ச்சிக்குரியவள்; தன்னை மறைத்துக் கொள்பவள்;
வனாந்திர சூழ்நிலையை அறிந்தவள். யார் அவள்? - அபிகாயில்.
5. தனிமையான அம்மா; தாழ்மையான அம்மா; ஆசிர்வதிக்கப்பட்ட அம்மா; தூதன் சொல் கேட்டு பணிந்த அம்மா. இவர் யார்? மரியாள்.
6 விசுவாசியாம் விசுவாசி ; வயது முதிர்ந்த விசுவாசி; ஜெபத்தில் தரித்திருந்த விசுவாசி; உபவாசத்தில் உறுதியாக இருந்த விசவாசி. இவர் யார்? அன்னாள்.
7. மாமியார் உடைத்தால் மண்குடமாம், மருமகள் உடைத்தால் பொன் குடமாம். ஆனால் மாமியார் மருமகள் உறவை மகுடத்தில் ஏற்றிய மருமக்கள் அவர்கள் யார்? ஒர்பாள்-ருத்.