யாருக்காக சிலுவை


பாரமிக்க சிலுவையை தோளில் சுமத்தி,

கோரமான ஈட்டியால் விலாவில் குத்தி ,

முள்முடியை தலையில் சூட்டி,

உடலில் உள்ள உதிரம் அனைத்தையும் சிந்தி


அதுமட்டுமல்ல


நடந்து வந்த பாதையில் 3முறை கீழே விழுந்து,

150 கிலோ எடையுள்ள சிலுவையை தூக்கி,

தலையை 17 முட்கள் கிழித்து,

உடலில் உள்ள 6.5 லிட்டர் இரத்தம் வெளியேறி,


அதுமட்டுமா?


பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை,

கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை,

குருதி சிந்தி பாடுபட்டும் மறுதலிக்கவில்லை,

மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை.


யாருக்காக? யாருக்காக?


ஒருநொடி, நம்மை நாமே ஆராய்ந்து சிந்தித்து, சீர்தூக்கி பார்க்கலாமே!


"இயேசு பிதாவே.....ஜீவனை விட்டார்".

லூக்கா 23:46