குழந்தைகள் தினம்

🎂 Nov-14; என்றதுமே ஞாபகம் வருவது பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினம் தானே! அவருக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம். அவருக்கு மட்டுமா? என்ன?


📖 மத் 19:17ல் சிறுபிள்ளைகள் என்னிடத்திற்கு_ _ _ _ _ _ என்றாரே நம் அப்பாவும் தானே! வேதத்திலும் கூட சிறுபிள்னைகள் இடம் பெற்ற சிறப்புகளை அறிவோமா!


👦 ஆசாரியன், ஏலியைவிட, தேவன் பேச விரும்பியது சாமுவேல் என்னும் சிறுபிள்ளையிடம் தான்.


கோலியாத்தை மேற்கொள்ள தேவன் பயன்படுத்தியது தாவீது என்னும் சிறுவனைத் தான்.


?? சத்துருக்களினிமித்தம் தேவன் பெலன் உண்டு பண்ணினது குழந்தைகள்_பாலகர் வாயினாலே தான்.


😇 சீஷர்கள் அதட்டின பின்னும், இயேசு தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தது குழந்தைகளைத் தான்.


🏜 ஆகார் வனாந்தரத்திலே அலைந்து திரிந்து அழுத போது தேவன் கேட்டது பிள்ளையின் சத்தத்தைத் தானே !


ஆகவே


👨‍👩‍👧‍👦 நாமும்கூட "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழியை மனதில் கொள்வோம். பிள்ளைகளை கர்த்தருக்கேற்ப சிட்சையிலும், அன்பிலும் வளர்த்து நல்லதொரு தேவசந்ததியை உருவாக்க முயற்சிப்போம்.