தெரிந்துகொள்வோமா!
1. ஆடம்பரம் அழிவைத் தரும். ஆரோக்கியம் நல்வாழ்க்கை தரும்.
2.கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம் மிதிவண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
3.ஆயிரம் பேரைக்கூட எதிர்த்து நில் ஒருவரையும் எதிர்பார்த்து நிற்காதே.
4. கடனாக இருந்தாலும் சரி; அன்பாக இருந்தாலும் சரி திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.
5. உன்னை நீ செதுக்கிக்கொண்டே இரு வெற்றி பெற்றால் சிலை, தோல்வி அடைந்தால் சிற்பி.
6. உண்மை எப்போதும் சுருக்கமாக பேசப்படுகிறது. பொய் எப்போதும் விரிவாக பேசப்படுகிறது.
7. பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் பொய். அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்துவிடுகிறோம் என்பதே மெய்.
8.விழுதல் என்பது வேதனை விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை.
தெரிந்துகொண்டதை கடைப்பிடிப்போமா!