கொர்நேலியு
♦️ இத்தாலியா பட்டாளத்துக்காரன்; செசரியா பட்டணத்துக்காரன்; நூற்றுக்கு அதிபதி; இவன் யார்? கொர்நேலியு (அப் 10:1)
♦️ மணி ஒன்பது அடித்தது; பார்வை உற்று நின்றது; பயம் வந்து சேர்ந்தது; செய்யவேண்டியது புரிந்தது; இது யாருக்கு ? கொர்நேலியு (அப் 10: 3-6)
♦️ கொர்நேலியுவைப் பற்றிய விபரம் இதோ!
மிகுந்த தேவபக்தி உள்ளவன்; தேவனுக்கு பயந்து வாழ்ந்தவன்.
இதுமட்டுமா?
♦️ வீட்டார் அனைவரையும் கூட தேவனுக்கு பயந்து வாழப் பழக்கியவன்.
♦️ "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்" என்றபடி தர்மம் செய்வதில் சகலகலா வல்லவன். மிகப்பெரிய செல்வந்தனாயினும் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது பரமனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவன்.
♦️ மிகுந்த பக்தி உள்ளவர்கள் கூட செய்ய முடியாத செயலை செய்தவன். அப்படி என்ன? எப்பொழுதுமே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவன். அவன் செய்த ஜெபம் மட்டுமல்ல; செய்த தர்மங்கள் கூட தேவ சந்நிதியில் எட்டியது. குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, பட்டணத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து நீங்கா இடம் பெற்றவன்.
நானும் என் வீட்டாருமோவென்றால்... யோசுவா 24:15