🛐 தேவையானது - அவசியமானது, அத்தியாவசியமானது; எது? ஜெபம் தானே!🛐
🛐 மலைபோலுள்ள மனித உதவிகளைவிட மலையைத் தகர்க்கும் ஜெபமே பெரிது.
🛐 தட்டுப்பாடு இல்லாத ஆசீர்வாதம் பெற தடை இல்லாத ஜெபம் அவசியம்.
🛐 ஜெபம் என்பது வார்த்தையின் அலங்காரம் அல்ல; வாழ்க்கையின் அஸ்திபாரமாகும்.
🛐 சீரழிக்கப்பட்டதை சீரமைப்பதற்கு ஜெப அறையே சிறந்தது.
🛐 முன்னணியில் நிற்க விரும்புவோர் ஜெபத்தில் முன் மாதிரியாய் இருக்க வேண்டும்.
🛐 வெளியே கனி கொடுக்க உள்ளே ஜெபத்தில் உரமிடப்பட வேண்டும்.
🛐 தகுதிக்கு மேலான உயர்வைப் பெற திராணிக்கும் மேலான ஜெபம் அவசியம்.
😇 "அதிக ஜெபம் உள்ள சபை தான் வளரும்"