ஆராதனை
🙅🏻♂ ஆராதனை தேவை தான் ஆனால் அவர் மகிமையடையாத ஆராதனை தேவையே இல்லை.
👣 நடனத்தோடு கர்த்தரை துதிப்பதில் தவறில்லை;ஆனால் அவரோடு நடக்காமல், அவர் வார்த்தையில் நிற்காமல் ஆடும் ஆட்டத்தில் அர்த்தமில்லையே!
😇 பிரசங்கம் அவசியம் தான்; ஆனால் அவர் பிரசன்னத்தை உணர முடியாத பிரசங்கத்தால் பிரயோஜனமில்லையே!
🎶 ஆலயத்தில் இசை இருக்க வேண்டும். ஆனால் உடல் அசைவதற்கு மட்டுமல்ல; உள்ளம் தேவனோடு இசைந்திருப்பதற்கே!
🚫 தேவன் இல்லாத, தேவனோடு இல்லாத எதுவும் ஊழியத்தில் தேவையில்லையே!
👍🏻 மேற்கூறியவற்றை சிந்தித்து செயல்படுவோமா!