இந்த புதிய ஆண்டில்..
அன்பாக இரு- பிறரிடத்திலும், உடன்பிறந்தவர்களிடத்திலும்.
ஆவியானவரை வாழ்க்கையில் செயல்படுத்து.
இயேசுவைப்போல் உன்னை மாற்ற பிரயாசப்படு.
ஈகைக் குணம் உள்ளவனாய் இரு.
உண்மை, தாழ்மையுடன் நட.
ஊழியம் செய்; தேவ சித்தத்தை அறிந்து.
என் வாழ்க்கை, என் குடும்பம் என்ற குறுகிய எண்ணத்தை நீக்கு.
ஏற்றுக்கொள், வாழ்வில் நடக்கக்கூடியவைகளை மனரம்மியமாக.
ஐயப்படாமல் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இரு.
ஒத்துக்கொள் உன் தவறுகளை, திருத்திக்கொள் விரைவாக.
ஓயாமல் உழை. கர்த்தருக்காய், குடும்பத்திற்காய்.
ஔவியம் அகற்றி அன்பை தரித்துக் கொள்.
இவைகளை அனைவருமே கடைபிடிக்கலாமே!!