கணவர்களின் கனிவான கவனத்திற்கு



👫 கணவரே-குடும்பத்தில் எதுவாய் இருந்தாலும் மனைவியிடத்தில் கலந்து பேசி முடிவெடுங்கள்.


👫 ஒன்றும் தெரியாதவள் என ஒதுக்கிவிடாதீர்கள்.


👫 உங்களுக்கு ஏற்ற துணை, உற்ற துணை உங்கள் மனைவி மட்டும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.


👫 பிள்ளைகள், உடன்பிறப்புகள் உடன் இருப்பது குறிபிட்ட காலம் தான் என்பதை அறியுங்கள்.


👫 தவறு இருப்பின் மனைவியிடம் Sorry கேட்பது தவறு இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அதற்காக உங்களை அடக்கி ஆள இடம் கொடுத்து விடாதீர்கள்.


👫 தாய்க்கு பின் தாரம் தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


👫 பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் வாழுங்கள்.


👫 மனைவியை அன்பால் திருத்துங்கள்.

இல்லையெனில் ஆண்டவர் கரத்தில் ஒப்புக்கொடுத்து விடுங்கள். அவருக்கு கணக்கு கொடுப்பவர்கள் அவர்கள் தானே!


👫 பிரச்சினையை பெரிதாக்கி விடாதீர்கள்.


புருஷர்களே உங்கள் மனைவிகளில்....கொலோ 3:19


👫 கடைசியாக குடும்ப சமாதானத்தை காத்துக்கொள்ளுங்கள்.