இயேசு கிறிஸ்துவின் பிறப்பு


1. வசந்த காலம் வேண்டாம்; பனிக்காலமே போதும். மாட மாளிகை வேண்டாம்; மாட்டுக் கொட்டிலே போதும். மன்னர்கள் வேண்டாம்; இடையர்களே போதும். பஞ்சு மெத்தை வேண்டாம்; தீவனத்தொட்டியே போதும். பகல் வேண்டாம்; நள்ளிரவே போதும் என பாரில் உதித்த பரமனின் பிறந்தநாள்.


2. தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளித்து, தரத்தை உயர்த்தும், சமாதானக்காரணரின் பிறந்தநாள்.


3. சாந்தகுணமுள்ளவர்களை அலங்கரித்து சத்துவத்தால் உணர்த்தும் உன்னத தேவனின் பிறந்தநாள்.


4. மண்ணை மனிதராக்கிய தந்தையைப் போல மரித்தோரை மனிதராக்கிய புனிதரின் பிறந்தநாள்.


இயேசுவின் பிறப்பு வித்தியாசமானது; அதிசயமானது.


இன்று கர்த்தராகிய கிறிஸ்து....... லூக்கா 2:11