🍁 தேவையற்றவர்களோடு தேவையற்றவைகளை பேசி தேவ பிரசன்னத்தை இழந்து போவதை விட, தேவையானவர்களிடம் தேவையானதை பேசி தேவ பிரசன்னத்தை காத்துக் கொள்வதே கர்த்தரின் பிள்ளைகளுக்கு அடையாளம்.
🍁 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீ கொடுக்கும் அன்பு என்றாவது ஒருநாள் வட்டியும் முதலுமாக திருப்பி கிடைக்கும்.
🍁 பரிசுத்தமற்ற உலகிலிருந்து, பரிசுத்தமற்ற ஒரு மனிதனை, கடவுள் எடுத்து அவனை பரிசுத்தமாக்கி மறுபடி இந்த பரிசுத்தமற்ற உலகில் வைத்து பரிசுத்தமாய் காக்கிறாரே அதுதான் அற்புதங்களிளெல்லாம் அற்புதம்.
🍁 முட்கள் நிறைந்த நம் வாழ்க்கையில் எப்போதுமே நமக்கு ஆறுதலாய் இருப்பது
நமக்காய் முள்முடியேற்ற இயேசு மட்டுமே.
🍁 தேவனுக்கு ஊழியம் செய்வது எவ்வளவு முக்கியமோ, தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதும் அவ்வளவு முக்கியம்.
🍁 பிறருக்கு தீமை செய்வது மட்டும் பாவம் அல்ல, பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பதும் பாவம்.