சிந்தனைக்கு
♦️எழுந்தவுடன் ஜெபிக்கிறவர்களைவிட, ஜெபிக்கிறதற்காக, எழும்புகிறவர்களாய் இருப்போம்.
♦️ உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
♦️ தண்டனை கொடுக்க தாமதம் செய்; ஆனால், மன்னிப்பு கொடுக்க யோசனைகூடச் செய்யாதே.
♦️உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.
உன் நிலமை, கொஞ்சம் இறங்கினால்,
உன் நிழலும்கூட உன்னை மிதிக்கும்.
♦️ சுவிசேஷம் என்பது சுத்தியலால், கல்லை உடைப்பது அல்ல;
உளியால் சிலையை உருவாக்குவது.
♦️ சிலுவையை, தூரத்தில் இருந்து பார்க்கிறவன் நம்பிக்கையைப் பெறுவான்;அருகில் வந்து பார்க்கிறவன், இரட்சிப்பைப் பெறுவான்; தன் மீது சுமக்கிறவன், சீஷனாய் மாறுவான்.
♦️கிடைக்கப்பெற்ற கிருபையை, இடைக்கால மனிதர்களுக்காக விடைகொடுத்து விடாதே.
♦️ ஒரு கலசத்திற்கும் "பலன் உண்டு" என்பதை மறந்து விடாதே!