🤝🤝 மகனே! மகளே! என் கரத்தைப் பிடி! 🤝🤝




🤝 மனிதர்களிடம் கைகூப்புவதை நிறுத்திவிடு. உன் கரங்களை எனக்கு நேராக உயர்த்திவிடு. உன் ஆவி, ஆத்துமா, சரீரத்தை என்னிடம் கொடுத்துவிட்டு மேலானவைகளை தேடுவதில் கவனத்தை செலுத்திவிடு.


🤝 இவ்வுலகம் உன்னை தன் பக்கம் இழுக்கும்; கடந்த கால பாவம் உன் அர்ப்பணிப்பைக் கெடுக்கும்; நித்திய மகிழ்ச்சி உன்னை அணுகாமல் தடுக்கும்,


எனினும்;


🤝 புதிய ஆண்டை புதிய தீர்மானத்தோடு துவங்கி இருக்கிறாய், நான் மட்டும் போதும் என்றிருக்கிறாய், மகிமை மேல் மகிமை அடைய விரும்புகிறாய்.


🤝 நான் உனக்குள் இருப்பதை மறந்துவிடாதே!


😇 இன்றே கரங்களை உயர்த்தி என் கரங்களை பிடித்து விடு! (சங்கீதம் 119:48)