நாவு
பாவத்தின் தூண்டு கோல்; பாதாளத்தின் ஊன்று கோல்.
நாலு அங்குல நாக்கிற்கு, நண்பனும் தப்புவதில்லை.
காயம்பட்டவனுக்கு வைத்தியசாலையும் இல்லை.
சில நேரங்களில் நெருப்பாக அவதாரமெடுக்கும்.
இது கொட்டும் வார்த்தைகள் பீரங்கியாக வெடிப்பதும் உண்டு.
பாலீஷ் செய்து பழக்கி விட்டால் பக்குவமாகவும் பேசி பழகும்.
பாவியையும் பரமனோடு சேர்த்து விடும்.
அரிசி கொட்டினால் அள்ளிவிடலாம்; வார்த்தைகளை கொட்டினால் வாரவே முடியாது.
வார்த்தைகள் பணம் போன்றது; எண்ணி எண்ணி அளவோடு பேசுங்கள், வளமோடு வாழுங்கள்.
நாவும் நெருப்பு தான்....
யாக்கோபு 3:6