♦️♦️♦️ சிந்தனைக்கு ♦️♦️♦️




♦️ஒரு ஆண் பொறுப்புடன் செயல்பட்டால் அந்த குடும்பம் நன்றாக இருக்கும்; ஒரு பெண் பொறுப்புடன் செயல்பட்டால் அந்த  தலைமுறையே நன்றாக இருக்கும்.


♦️ வியர்வை சிந்தாத மனிதனாலும்,மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதிக்கவே முடியாது. 


♦️உண்மையை சொல்ல விரும்பாதவன் பிறருக்கு கேடு விளைவிக்கிறான். உண்மையை கேட்க விரும்பாதவன் தனக்கே கேடு உண்டாக்குகிறான்.


♦️உங்கள் தவறுகள் உங்கள் பழக்கமாக மாறுவதற்கு முன்பு அவற்றை சரி செய்து கொள்ளுங்கள்.


♦️உண்மை என்பது ஒரு கூர்மையான வாள்; அதனை யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் உபயோகிக்க முடியாது.


♦️பிறரின் பதில் சரி இல்லை என எண்ணும் முன், உங்கள் கேள்வி சரியானதா? என சிந்திப்போம்.


♦️ஜெபிக்கிறவர்கள் அறை வீட்டில் மறைந்திருந்தாலும், ஜெபத்தின் பலன் வெளி உலகத்திற்கு தெரியாமல் போவதில்லை.