ஜெயம் பெற்ற பெண்மணி - யார்?🧕🏻🧕🏻




🧕🏻விதவை ஒருத்தி விறகு பொறுக்கி, ஊழியருக்கு சிறிது உதவி, (விறகு)சுள்ளிப் பொறுக்கி, கிள்ளி கொடுத்து, பஞ்சத்திலும் கொஞ்சத்திலும், உண்மையாய் வாழ்ந்தாள். யார்?


🧕🏻வீட்டில் வசதி இல்லை; வாழ வழி தெரியவில்லை, உறவினர் யாரும் உதவவில்லை; உலகில் வாழ பிடிக்கவில்லை, காட்டுக்கு போய், கடவுளின் ஊழியர் ஒருவரைக் கண்டாள். யார்?


🧕🏻"இல்லை" என்பதை மாற்றிட அவரே தேடி வந்தார், வாழ்வை மாற்றிவிட்டார். உண்டு, உண்டு உணவும் உண்டு; எடுக்க, எடுக்க எண்ணெயும் உண்டு; சுரக்க, சுரக்க மாவும் உண்டு. யாருக்கு?


🧕🏻உன்னைத் தேடும் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டாலே "இல்லை" மாறும், தொல்லை தீரும், எல்லாமே ஜெயமாய் மாறும்.


🧕🏻போனதோ விறகு பொறுக்க, கண்டதோ தேவ தாசனை, செய்ததோ அவர் சொன்னதை, வாழ்ந்ததோ கஷ்டம் நீங்கி ஜெயமான வாழ்க்கையை. யார்?😇😇


சாறிபாத் விதவை