"நீ அவருக்கு வேண்டும்" வாலிபனே!



🤦🏻‍♂ "தடுமாறிவிட்டோம்" என்று தடம் மாறாமல், தயக்கத்தை தள்ளிவிட்டு தகப்பனிடம் தஞ்சமாக தாவி ஓடி வா.


🤦🏻‍♂ "கறை படிந்து விட்டோமே" என்று கண் போன போக்கில் போகாமல், கனிவோடு கரம் நீட்டி அழைக்கும் கர்த்தரிடம் கண்ணீரோடு ஓடி வா.


🤦🏻‍♂ "பாவியானோமே" என பரிதவித்து நிற்காமல், பாவத்தை உதறிவிட்டு பாசத்தோடு அழைக்கும் பரமனிடம் பணிவோடு ஓடி வா.


🤦🏻‍♂ "வீழ்ந்து விட்டோமே" என வழி விலகாமல், மனம் வருந்தி "வா" என்றழைத்து உன் வருகைக்காக காத்திருக்கும் வல்லவரிடம் வந்துவிடு. 


🏃🏻 வாலிபர்களே! என்ன யோசிக்கிறீங்க? தயங்காமல், தாமதியாமல் வந்து விடுங்கள்.


🤷🏻‍♂ "பயனுள்ள பாத்திரமாய் பயன்படுத்துவார் பரம தேவன்."


"இளவயதும், வாலிபமும் மாயையே" 

பிரசங்கி 11:10