அன்பு வாலிபர்களே!
💁🏻♂💁🏻♀️ அன்பு வாலிபர்களே! அறிந்து கொள்ள அவசியமானவை:
💁🏻♂ இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாத பருவம்.
💁🏻♀️ வாலிபம் என்பது:
தடுக்கி விழும் வயது; தடுமாறும் மனது; உண்மை தானே!
💁🏻♂ ஆண்டவர் அதிகம் விரும்புவது வாலிப பருவம்; ஆனாலும் ஆண்டவருக்காய் அர்ப்பணிக்க முடியாத பருவம்.
💁🏻♀️ நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் பருவம்;
எது வரினும் எதிர்த்து நிற்கும் பருவம்;
எதையும் சாதித்து சரித்திரம் படைக்கும் பருவம்; அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் பருவம்.
ஆனாலும்,
💁🏻♂ வாலிபத்தை ஆண்டவருக்காய் அர்ப்பணிக்கும் போது கிருபை கிடைக்கிறது.
கர்த்தரின் ஆசீர்வாதம் நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததிக்கும் கிடைக்கிறது.
💁🏻♀️ பின் என்னப்பா உங்களுக்கு கஷ்டம்?
கண்ணுக்கு கலிக்கம் போட்ட குதிரை கட்டுப்படுவதைப் போல, மனதை கட்டுப்படுத்தி கர்த்தர் பக்கம் திரும்புங்கள்!
😇 அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை பிரசங்கி 12:7