💁🏻‍♀️💁🏻‍♀️ பெண்களே! 💁🏻‍♀️💁🏻‍♀️




💁🏻‍♀️ தெபோராள் தேசத்திற்காய் எழும்பினாள் அன்று. தெபோராக்களாய் எழும்புவோம் நாம் இன்று.


💁🏻‍♀️ இறைவார்த்தைக்கு கீழ்படிந்தால் இல்லற வாழ்க்கை இனிமையாய் மாறும். மணநாளில் கணவன் மேல் உண்டான அன்பு மரணம் பிரிக்கும் வரை மாறாதிருப்போம்.


💁🏻‍♀️ உழைப்பில் தேனீக்களாய் ரெபேக்காளைப் போல, அழைப்பில் உறுதியாய் ரூத்தைப் போல, இரக்கம், தயவு, அன்பு, தாழ்மை என்ற இளநூலினால் ஆன பல வண்ண ஆடை அணிந்து ஆவிக்குரிய புதுமைப் பெண்களாய், இறைவனின் இதயத்திற்கு ஏற்ப வாழ்வோம்.


💁🏻‍♀️ பிள்ளைகளால் "பாக்கியவதி" என பட்டம் பெற்று, கணவரால் எல்லாருக்கும் மேற்பட்டவள் என புகழப்பெற்று, ஒளிவீசும் முத்துக்களாய் ஜொலிப்போம்.


😇 அடுப்பினடியில் கிடந்தாலும் அலங்கரிக்கப்பட்ட புறாச் சிறகுகளல்லவா நாம்! (சங்கீதம் 68:13)


😇 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும்...(I பேதுரு 3:4)


சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!


Happy Women's Day!!😊