கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்

1. உனக்காய் சிலுவையில் மரித்து இயேசு உயிர்த்தெழுந்தார்- ஏன்?

ஏதேனில் நீ இழந்த உன்னத மேன்மையை திரும்பவும் பெற்றுக்கொள்ள.


2. உலகிலே இயேசுவின் கல்லறை மட்டுமே இன்றும் திறந்துள்ளது. இன்றுவரை உயிரோடு வாழவைத்தவருக்கு உன் இதயக் கதவு திறந்துள்ளதா?


3. சீக்கிரமாய் வந்து உன்னை என்னோடு சேர்த்துக் கொள்வேன் என்ற மணவாளனுக்கு ஏற்ப நீ உண்மை மணவாட்டியாய் வாழ்கிறாயா?


4. மோசேயால் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம் போல உன் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்த இயேசுவை மட்டும் நோக்கிப்பார் - பிழைப்பாய்.


இயேசுவின் உயிர்த்தெழுதலை பெரிய கல்லால் தடுக்க முடியவில்லை. (மாற்கு 16:7)


கல்லில் வைக்கப்பட்ட முத்திரையாலும் தடுக்க முடியவில்லை (மத்தேயு 27:66)


அபிஷேகத்தை பெற்றுக்கொண்ட நாம் இயேசுவைக் குறித்து சாட்சிக் கொடுக்கவிட்டாலும் சாட்சியாய் வாழலாமே!!