யாருக்காக? யாருக்காக ? யாருக்காக?



அன்பு நண்பனே!


நீ யாருக்காக வாழ்கிறாய்?


நான், எனது, எனக்கு என்ற சிறிய வட்டத்திற்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறாயே! இது உனக்கே சரியா?


குயில் கூவுவதும், மயில் ஆடுவதும் யாருக்காக?

வாழை வளர்வதும், தென்னை குலை தள்ளுவதும் யாருக்காக?

மெழுகு உருகுவதும் கூட யாருக்காக?


உனக்காகத்தானே! - ஆனால்


நீ மட்டும் தன்னலமாய் உனக்காகத்தானே வாழ்கிறாய் ?


இதோ ஆச்சரியம்! ஆனால்; உண்மை


"பெலிக்கான்" என்ற பறவை கூட தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்கவில்லை எனில், தன் அலகால், தன் மார்பினில் குத்தி, கிழித்து தன் இரத்தத்தை குஞ்சுகளுக்கு உணவாக ஊட்டுமாம்.ஆனாலும் தன் ஜீவனை காத்துக் கொள்ளும்.


ஆனால் - தாயின் கருவில் நம்மை உருவாக்கி, நமக்காகவே தம் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிலுவையில் சிந்தி, ஜீவனைக் கொடுத்த இயேசப்பாவிற்கு நாம் என்ன செய்கிறோம் ? என்ன செய்துள்ளோம் ? பிறருக்கு தான் என்ன செய்துள்ளோம் என சிந்தித்து நம்மை நாமே இனியாவது பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்!!


பிரயோஜனமாயிருக்கிறதை_ _ _ _ _ _ ஏசாயா 48:17