நோவாவின் பேழை
உலகத்தின் ஜோடிகளை உயிரோடு காத்தவன், பல மாதம் பயணம் செய்து பத்திரமாய் மீண்டவன், யார்? பயண வாகனம் எது? நோவா-பேழை
புதியதோர் உலகம் காண புறப்படுவோம் எனத் தெரியாது நோவாவுக்கு அப்போது. எதிர்கால சந்ததிக்கு இரக்கம் பாராட்டும் இரகசியம் நோவாவுக்கு தெரிந்தது பின்னரே.
கர்த்தரால் பேழை செய்ய அழைக்கப்பட்டான், நோவா. மனிதநேயம் அற்றுப் போனதால் காக்கையும், குருவியும் பகுத்துண்டு வாழும் அன்பினை பேழையில் தான் கற்றுக்கொண்டன.
சகோதரனே! உன் உடன் பிறந்தவர்களோடு ஒருமித்து வாசம் செய்கிறாயா?
கர்த்தரின், வேளை வந்தது; மழையும் பெய்தது வெள்ளமும் உயர்ந்தது; ஆனால் நோவாவின் பேழையோ மிதந்தது.
இன்றோ! பலரின் இரட்சிப்பின் பேழைகள் சிறு மழைக்கே, வெள்ளத்தில் மூழ்குகிறதே!
ஆகவே, சகோதரனே! மழைக்காலம் வருகிறது; வெள்ளமும் கூட உயரலாம். உன் இரட்சிப்பின்பேழை வெள்ளத்தில் மூழ்குமா? மிதக்குமா? ஒரு முறை உன்னை நீயே பரிசோதித்துக் கொள்.