சாதனை படைக்கிறவர்கள் பெண்கள்:💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️



🧕🏻சுமக்க முடியாத சுமையை சுமந்தாளே;

நடக்க இருந்த பாதகத்தை சாதகமாய் மாற்றினாளே;வெகுதூரம் சென்று அழிவைத் தடுத்து நிறுத்தினாளே.அவள் யார்? அக்கா அபிகாயில் தான்!

இது மட்டுமல்ல!

நடந்த நடக்கப்போகிற காரியங்களைக் கவனித்து பார்த்தவள்;எதிலும் தாமதியாது தீவிரமாய் செயல்பட்டவள்;கணவனின் பழியைத் தன்மேல் சுமத்தியவள்;ஆபத்தைத் தடுத்து நிறுத்த தருணத்தை தாமதியாமல் செய்தவள்;

புத்தியுள்ள ஸ்திரீயாய் வீட்டைக்கட்டியவள்; நீதிமொழிகள் 14:1


👩🏻‍💼 B.A.,B.L., படிக்கல; Black கோட் போடல; Best ஆக நியாயம் தீர்த்த; First பெண் தீர்க்கதரிசி;அவள் யார்? நம் சகோதரி தெபோராளே தான்!

தேவ தெரிந்தெடுப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவள்; சிறையாக்கியவர்களை சிறையாக்க சீக்கிரமாய் புறப்பட்டவள்; பலவான்களை முறியடிக்க பாராக்கிற்கு பரமனின் பாதை காட்டச் சென்றவள்;தேவ சத்தத்தைக் கேட்டு தேவ சித்தத்தை நிறைவேற்றியவள்;ஜெபம், தியானத்தில் அதிக நேரம் தரித்திருந்தவள்.


👩🏻 சகோதரிகளே! நாம் எப்படி? ஊழியத்தில் தாயாக செயல்பட தருணம் கொடுக்கப்பட்ட பின்னும் தட்டிக்கழிக்கிறோமா? "எழும்பி போ" என்ற எழுப்புதலின் சத்தம் கேட்டும், எப்படி போவது? என எண்ணிக் கொண்டிருக்கிறோமா? நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை மனதில் கொள்வோம்!