📱📱 கைபேசி 📱📱
📱இறைவனுடன் இடைபடும் நேரத்தில், இனிய ஒலி எழுப்பி, அளவளாவும் நேரத்தை அளவில்லாமல் அபகரித்து விடுகிறது.
📱களைத்து வரும் நேரத்தை கருணையே இல்லாமல், களவாடி விடுகிறது.
📱குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில் குறுக்கே வந்து குழப்பம் தருகிறது.
📱பெற்றோர், பிள்ளை உறவுகளை பிரித்து வைத்து, பதம் பார்த்து, பிரிவினை உண்டு பண்ணுகிறது.
📱உழைப்பைக் கெடுத்து, உணவை தடுத்து,உதவாக்கரை கைபேசி உயிரை வாங்குகிறது.
📱பள்ளி செல்லும் பிள்ளைகளை, பாழும் கிணற்றில் தள்ளிவிட, பாதை காட்டி வருகிறது.
📱இவ்வளவு கெடுதல் இருந்தாலும் சில பயன்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே, நல்லவற்றுக்கே பயன்படுத்துவோம்.
இருப்பினும்
கர்த்தர் கிருபையாய்க் கொடுத்த நேரத்தை, கருத்தாய் பயன்படுத்தி, கர்த்தருக்கு மகிமையை செலுத்தி, வளமான வாழ்க்கை வாழ்வோம்😇😇