இறக்கிவைக்க முடியாத சிலுவை
⛪ ஆலயத்தின் வாசலில் அனாதையாய் கிடந்தது ஒரு சிலுவை;
✝️ இது யாரோ சுமந்து வந்த சிலுவை;
✝️ இது யாரோ தொலைத்த சிலுவை;
✝️ ஆராதனை அவசரத்தில் யாருமே திரும்பிப் பார்க்காத சிலுவை;
✝️ ஒவ்வொருவரிடமாக காட்டப்பட்ட சிலுவை;
✝️ ஒருவருமே தன்னுடையது என உரிமை பாராட்டாத சிலுவை;
✝️ எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட சிலுவை;
✝️எல்லோரும் ஒதுக்கிய சிலுவை;
அடுத்ததாக
🚗காரில் வந்தவரிடம் கேட்க, ஆலய உச்சியில் இருப்பது தான் "என் அன்பளிப்பின் சிலுவை" என்றார்.
👨 வெண்ணுடை தரித்தவரைக் கேட்க, "என் சிலுவையை இயேசு சுமந்து விட்டார்" என்றார்.
❣️கடைசியாக இயேசுவைக் கேட்க, இயேசுவின் பதில் இதோ! மகனே மகளே இதுதான் உன் "இரட்சிப்பின் சிலுவை" என்றார்.
😇 நம் அனைவருக்குமே அவர் சொன்ன ஒரே பதில் இதுவே.
😊 சற்று சிந்திப்போமா?
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு_ _ _ _ _ _ மத்தேயு 10:38