🔶🔶 சிந்தனைக்கு🔶🔶
🗡️ யுத்தகளத்தில் கோலியாத் நின்றது திறமையை நம்பி;ஆனால் தாவீது நின்றதோ கிருபையை நம்பி; மனிதனின் திறமை தோற்கலாம், ஆனால் தேவனின் கிருபை ஒருபோதும் தோற்றதில்லை.
🙏🏻 ஜெபம்: உடைந்த பாத்திரத்தையும் உதவாத பாத்திரத்தையும் உபயோகமுள்ளதாக மாற்றுகிறது.
✌🏻 வாழ்க்கையில் வென்றவனை விட, வாழ்க்கையை வென்றவனே சாதனையாளராக மதிக்கப்படுகிறான்.
🤷🏻♀ சந்தோஷத்தில் வாழ்கிறோம் என்பதை விட எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு
வாழ்கிறோம் என்பதே உண்மை.
🛣️ பரிசுத்தமாக வாழ ஒரே வழி பைபிள்; பரலோகம் போக ஒரே வழி இயேசு;
உலகத்தை ஜெயிக்க ஒரே வழி விசுவாசம்.
📖 நூலகத்துக்குள் புத்தகங்கள் உண்டு. ஆனால், ஒரு புத்தகத்துக்குள் ஒரு நூலகமே இருக்கிறது; அதுதான் பரிசுத்த வேதாகமம்; இந்த உன்னத நூலகத்தில் நீங்களும் உறுப்பினராகி விடுங்கள்; ஆயுள் சந்தா பணம் அல்ல - உங்கள் இருதயம் மட்டுமே!
🍂 இலையுதிர் காலத்தில் தன் அத்தனை இலைகளையும் இழந்த ஒரு மரம் சுமந்து நிற்பது நம்பிக்கையை மட்டுமே!
👫 புரிந்து நடக்க ஒரு துணை இருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம் வாழ்க்கை முழுவதும்.