உன்னோடு பேசவேண்டும்
அதிகாலையில் பேச ஓடி வந்தேன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாய்,
காலையில் பேச வந்தேன் கடமைக்கு கூட வேதத்தை வாசிக்கவில்லை,
மாலையில் பேச ஓடி வந்தேன், மணிக்கணக்காய் பேசினாய் உன் நண்பர்களிடம்,
இரவிலாவது பேசுவாய் என ஆசையாய் காத்திருந்தேன் நீயோ உறக்கத்தில்_ _ _ _ _ _
கரம் விரித்து உயிரையே தந்தேன் நீயோ காயங்களையே பரிசளிக்கிறாய்.
"என்றாவது ஒரு நாள் என்னிடம் பேசுவாய் என காத்திருக்கிறேன்"
நேற்று _இன்று_அல்ல_காலம் காலமாய்.
பேசும் கடவுள் இயேசு. ஒரு முறையாவது அவருடன் பேசுங்கள்.