ஆறு (River) உணர்த்தும் ஆறு (Six) அறிவுரைகள்


🚣🏻 ஆறு செல்லுமிடமெங்கும் தன்னால் இயன்ற அளவு தன்னையே பிறருக்கு கொடுக்குகிறது. அதுபோல, நாமும் செல்லுமிடமெல்லாம் பிறருக்கு பிரயோஜனமுள்ளவர்களாய் வாழ்வோம்.


🚣🏻 ஆறு, குப்பை, அழுக்குகளை அடித்து சென்று சுத்தப்படுத்துவதைப் போல, நாமும் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை அகற்றி மக்களை பரிசுத்த பாதைக்குள்ளாய் வழிநடத்த வேண்டும்.


🚣🏻 ஆறு, தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை போல, நாமும் செய்யும் வேலையில் (சோம்பேறித்தனம் இல்லாமல்) இடைவிடாது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.


🚣🏻 ஆறு, பள்ளத்தைக் கண்டவுடன் பாய்ந்து வேகமாய் ஓடி, அதை நிரப்புவதைப் போல, நாமும், ஏழை எளியவர்களை இழிவாக எண்ணாது உதவி செய்து உயர்த்த வேண்டும்.


🚣🏻 ஆறு அடித்தளத்தில் வித்தியாசமாய் இருந்தாலும் மேல்பகுதி ஒரே சீராய் தெரிவதைப் போல, நாமும் நம் மனக்கவலைகளையே எண்ணாமல் ஒரே சீரான எண்ணத்துடன் பிறரை நேசிக்க வேண்டும்.


🚣🏻 ஆறு வளைந்து, நெளிந்து, சென்றாலும் ஒரே நோக்கம் கடலில் கலப்பது தான். அதுபோல நாமும் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஒரே நோக்கம் பரலோகம் செல்வதாய் இருக்க வேண்டும்.


பரலோகம் திறந்திருக்க கண்டேன்... வெளிப்படுத்தின விசேஷம் 19:11