🌟 நம்பிக்கை நட்சத்திரம்🌟


🎉 மதங்கள் கொண்டாட நிறைய பண்டிகை; மானிடமே கொண்டாட ஒரே பண்டிகை; அதுதான் கிறிஸ்மஸ் பண்டிகை.


👶🏻 காலம் காலமாய் கண்ணீர் சிந்திய மானிட இனத்தின் பாவங்களை, அதனால் உண்டான காயங்களை, தனது செந்நீரில் கழுவிய இயேசு பாலகனின் பிறப்பு உலகப் பண்டிகை என்பது உண்மைதானே!  


அது மட்டுமா?


🪙 அவர் பிறப்பை சொன்னதோ விடிவெள்ளி; ஆனால் இறப்பு நிகழ்ந்ததோ ஒரு வெள்ளி;

அவரை காட்டிக் கொடுத்ததோ முப்பதே முப்பது வெள்ளி;

அவர் வாழ்க்கையோ உலக தலைமுறைக்கு சமத்துவக் கல்வி.


❤️  மதத்தை ஸ்தாபிக்க  வரவில்லை. மனுக்குலத்தை மீட்கத் தானே வந்தார். இது தவறா? ஏழைகளுக்கு இரக்கம் காட்டியது; பாவிகளை நேசித்தது குற்றமா?


தேவ பிள்ளைகளே! 


✨ நம்பிக்கை நட்சத்திரமாக இவ்வுலகில் உதித்த இயேசுவை நம்பி வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தால் நிச்சயம் மாற்றத்தையும், ஆசீர்வாதத்தையும் காணலாம்.


😇 உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதம்...... நீதிமொழிகள் 28:20