வாலிபர்களே!
கடினமான வேலைகளில் தான் கச்சிதமான பாடங்களை கற்றுக் கொள்கிறோம்.
குறைகளைக் கண்டு குன்றிப்போகாதீர்கள், நீங்கள் தான் ஆண்டவருக்குத் தேவை.
தாவீதின் வாழ்க்கையில் கரும்புள்ளி ஏற்படவும், சிம்சோன் பெலத்தை இழந்து போகவும், யூதாஸ் அழைப்பை அழிந்து போகப்பண்ணவும் காரணம் என்ன?
விபத்து போல் வந்த சோதனை அல்ல, விரித்து வைக்கப்பட்ட வலையிலே விபரீதமாய் விழுந்து, வேடிக்கைக்குப் பாத்திரமானவர்கள்.
ஆகவே தான் மனந்திரும்புதல், பரிசுத்த வானுக்கும் உண்டு.
சிங்கத்தின் வாயைக் கிழித்த சிம்சோன் சீரழிந்ததற்குக் காரணம், கர்த்தரின் சித்தத்தை மீறி, சிரச்சேதம் செய்தது. சிந்தனை மண்டலத்தில் சாத்தானுக்கு புகலிடம் கொடுத்தது.
ஆகவே
எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, யோசேப்பைப் போல் பரிசுத்தம், தானியேலைப் போல் ஆழமான அசைக்க முடியாத விசுவாசம், உடையவர்களாய் வாழ்ந்து, பரலோகத்திற்கு பங்குள்ளவர்களாய் மாறுங்கள்.
வாலிபர்கள்! கர்த்தருடைய கையில் இருக்கிற கூர்மையான துலக்கமான அம்புகள்.
ஏசாயா 49:2